சனி பெயர்ச்சி பலன்கள்: 30 ஆண்டுக்கு பின்பு சனியின் மாற்றம்! 2025 வரை பேரதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசிகள்
சனியின் தாக்கத்தால் 2025ம் ஆண்டு வரை 3 ராசிக்காரர்கள் நல்ல பலன்களை பெறுவார்கள். சனியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சனி பகவானால் மக்கள் தாங்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அனுபவிப்பார்கள். ஒரு ராசியில் சுமார் இரண்டரை வருடங்கள் இருக்கும் ஒரே கிரகம் சனி மட்டுமே.
இந்தாண்டு, ஜனவரி 17ஆம் தேதி, சனி தனது அடிப்படை திரிகோண ராசியான கும்பத்தை கடந்தார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் கும்ப ராசியில் நுழைந்துள்ளார்.
2025ஆம் ஆண்டு மார்ச் 29ம் தேதி வரை சனி கும்ப ராசியில் இருப்பார். இதனால் 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டமும், செல்வமும் பெறும் நிலையில் ராசிகளை குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மகரம்
சனி பகவானின் சாதகமான சூழ்நிலையினால், பணவரவு அமோகமாக இருப்பதுடன், பேச்சில் சிறப்பான தாக்கம் ஏற்படுவதால், இதனால் அநேகர் ஈர்க்கப்படுகின்றனர். வாகனம், சொத்துக்கள் வாங்கும் நிலையில், வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்கு சனி பகவான் 2 ஆண்டுகளுக்கும் மேலாக செல்வத்தை அள்ளி கொடுக்க இருக்கிறார். ஜனவரி முதல் ஆரம்பமாகும் இந்த ராசியின் நல்ல நேரம், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு சனிபகவானில் பார்வையால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் சிறப்பாக முடியும். நல்ல காலம் ஏற்படுவதுடன், அதிர்ஷ்டமும் ஏற்படுமாம்.