சனிப்பெயர்ச்சியின் ஆரம்பம்: இந்த 4 ராசிக்கு எப்படிப்பட்ட அதிர்ஷ்டம் உண்டாகும்?
சனிப்பெயர்ச்சியானது 2.5 முதல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும். இந்த ஆண்டு, ஏப்ரல் 29ஆம் தேதி அன்று சனி தனது ஆட்சி வீடான மகர ராசியில் இருந்து மற்றொரு ராசி வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
12 ராசிக்கட்டத்தில் 11 வது வீடு கும்ப ராசி. இது காற்று ராசி மற்றும் லாபஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்கும் என்ன விதமான மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது.
மேஷம்
மேஷ ராசிக்கு தொடக்கத்தில் சனி உங்கள் பத்தாம் வீட்டில் இருக்கிறார். இந்த சனிப்பெயர்ச்சி மேஷ ராசிக்கு மிகவும் சாதகமான காலமாக இருக்கும். 10 மற்றும் 11ம் வீடுகளின் அதிபதியான சனி, லாபஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பது நல்ல பலன்களைத் தரும்.
நீங்கள் கடினமாக் உழைக்க வேண்டிய காலம், அதே நேரத்தில்உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். நிர்வாக வேலைகள், சட்ட நிறுவனங்கள், இயந்திரங்கள் சம்மந்தப்பட்ட வேலைகள்.
மேலும், பெட்ரோல் துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான காலம் இருக்கும். நீண்ட கால திட்டங்கள் வெற்றி பெறும். குறுக்கு வழிகள் மற்றும் அபாயகரமான முதலீட்டைத் தவிர்க்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு பெற்று சனி சஞ்சரிக்கிறார். தற்போது கர்ம வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இயல்பாகவே தர்ம கர்மாதிபதி யோகம் என்பது ரிஷப ராசியினருக்கு மட்டுமே பொருந்தும்.
அந்த யோகத்தின் அடிப்படையில் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வீட்டுக்கான அதிபதி ஆட்சி பெறுவது மிகவும் சாதகமான காலகட்டம். பத்தாம் வீடு தொழில் மற்றும் வேலை ஆகியவற்றையும் குறிக்கும். நீங்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த வளர்ச்சியும் முன்னேற்றமும்,வேலை மற்றும் தொழிலில் காணப்படும்.
உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் அதிபதியான சுக்கிரன் சனிக்கு நண்பராக இருப்பதால் உங்கள் தொழிலை மேம்படுத்த பல வாய்ப்புகள் உள்ளன.
மிதுனம்
மிதுன ராசிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அஷ்டம சனியால் பல்வேறு விதமான பிரச்சனைகளை எதிர்கொண்ட உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி மிகப்பெரிய நிம்மதியை தரும்.
தொடர்ந்து இதுநாள் வரை தாங்க முடியாத அளவுக்கு உடல்ரீதியான பிரச்சினைகள் மற்றும் மன ரீதியான,துன்பம் மன அழுத்தம் ஆகியவற்றை எதிர்கொண்டு வந்த நீங்கள் அதிலிருந்து விடுபடும் காலம். பண வரவு அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசியினர்கள் ஏழாம் வீடான மகர ராசியில் கண்ட சனியாக இரண்டரை ஆண்டுகளாக சஞ்சரித்துக் கொண்டிருந்த சனி தற்பொழுது அஷ்டம சனியாக கும்ப ராசிக்கு செல்கிறார். அஷ்டம சனி என்றாலே பொதுவாக பலரும் பயப்படுவார்கள்.
ஆனால் சனி ஆட்சி பெற்று செல்வதால் இந்த காலகட்டத்தில் பெரிதாய் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.
பொதுவாக நீங்கள் உறவுகளில் நெருக்கடிகளை இந்த காலகட்டத்தில் எதிர்கொள்வீர்கள். விட்டுக்கொடுப்பது, வீண் விவாதங்களைத் தவிர்ப்பது, மற்றும் அனுசரித்து செல்வதும் அவசியம்.
