கடலில் இருக்கும் சங்குகள் பற்றி இதுவரை யாரும் அறிந்திடாத அதிசயங்கள்; என்னென்ன?
இன்றைய பதிவில கடலில் இருந்து கிடைக்கும் ஒரு அற்புத பொருளான சங்குகள் குறித்து பார்க்கலாம். கடலில் இருந்து கிடைக்கும் அற்புதமான அம்சங்களில் ஒன்றுதான் சங்கு.
சங்கு ஒரு உயிரற்ற பொருள் என்பது தவறான கருத்து என பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். காரணம், கடலுக்கு அடியில் வாழக்கூடிய நத்தைகள் மற்றும் கிழிஞ்சில்களின் ஊடுகள்தான் இந்த சங்குகள் எனவே சங்கு உயிரற்ற ஒரு பொருள் என்பது தவறு என சுட்டிக்காட்டியும் இருக்கிறார்கள்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமேயானால் சங்கு என்பது ஒரு ஓரோட்டு உயிரினம் ஆகும். இந்த சங்குகள் பொதுவாக மருத்துவ தேவைகளுக்காகவும் உணவிற்காகவும் கைவினைப்பொருட்களினை தயாரிப்பதற்காகவும் இவை கடலில் இருந்து வெளியே எடுக்கப்படுகின்றன.
ஒரு மனிதனுடைய வாழ்க்கை எப்படி அழுகையில் ஆரம்பித்து அழுகையில் முடிவடைகின்றதோ அதே போலத்தான் குழந்தை பருவத்தில் பால் ஊட்டுவதற்கு பலர் இந்த சங்கினை பயன்படுத்துகிறார்கள்.
அது மாத்திரம் அல்லாமல் மரண சடங்குகளின் பொது இறுதி நேரத்தில் சங்கு ஊதப்படுகின்ற வழக்கமானது இன்றளவிலும் பல இடங்களில் காணப்படுகின்றமையினையும் குறிப்பிடலாம்.
இவ்வாறு கடலுக்கு அடியில் வாழும் சங்குகளில் பல வகைகள் காணப்படுகின்றன. அவை அளவு ரீதியில் அதிகளவில் வேறுபடுகின்றன. இவ்வாறு கடலுக்கு அடியில் காணப்படும் சங்குகளினை சேகரிப்பதனை பலர் தமது தொழிலாக கொண்டுள்ளதுடன் அதற்க்கென பிரசித்தி பெற்ற பல இடங்களும் காணப்படுகின்றன.
உயிரற்ற நிலையில் இந்த சங்குகள் பல்வேறு இடங்களில் பல்வேறுபட்ட தேவைகளுக்காக பயன்படுத்த பட்டாலும் கூட உயிருள்ள நிலையில் இவை முழுமையான மாமிச உணவு என்பதுடன், இந்த சங்குகளும் கடலுக்கு அடியில் இருக்கக்கூடிய பூச்சி வகைகளினையே அதிக அளவில் உணவாக உட்கொள்கின்றன என்பதனையும் குறிப்பிடலாம்.
கடலில் இவை வாழ்ந்தாலும் கூட இவற்றிற்கு ஊர்ந்து செல்லும் ஆற்றல் கிடையாது. இருந்தாலும் கூட கடல் படுகைகளில் ஊர்ந்து தமது நகர்வுகளினை செய்கின்றன. இவ்வாறு ஊர்ந்து செல்லும் வேளைகளில் கடல் மணல் ஓட்டினுள் நுழையாமல் இருப்பதற்கான விசேட ஆற்றலினையும் இவை கொண்டுள்ளன.
இந்த சங்கு பூச்சிகளில் ஆண் சங்கு பூச்சிகளினை காட்டிலும் பெண் சங்கு பூச்சிகள் நிறை கூடியவையாக காணப்படுகின்றன. அதிலும் பெண் சங்கு பூச்சிகள் 10- 20 வீதம் அளவில் நிறை அதிகமாக காணப்படும்.
ஜனவரி மாதம் தொடக்கம் மார்ச் மாதம் வரையில் இவை தமது இனப்பெருக்கத்தினை மேற்கொள்கின்றன.
பெண் சங்கு பூச்சிகள் தாம் இடும் முட்டைகளினை தமது ஓட்டின் உள்ளேயே வைத்து பாதுகாக்கின்றன.
பண்டைய காலங்களில் நேரத்தினை அறிவிப்பதற்காக பெரியவர்கள் பொது வெளியில் வைத்து சங்கினை ஊதுவார்கள். ஆனால் தற்காலத்தில் ஆலயங்களிலும் பல விசேட நிகழ்வுகளிலும் சங்கினை முழங்கி நிகழ்வுகளினை ஆரம்பிக்கைன்றார்கள்.
இந்த சங்குகள் அலங்கார பொருளாக மாத்திரம் அல்லாமல் மருத்துவ தேவைகளுக்கும் பயன்படுகின்றன. இருக்க கூடிய அனைத்து சங்குகளிலுமே அதிகம் விலை உயர்ந்தது வலம்புரி சங்கு.
இது வெண்மையாக காணப்படும். இதனை சிலுவை சங்கு என்றும் குறிப்பிடுவார்கள். இதனால் நன்மைகள் கிடைப்பதாக நம்பிக்கை இருப்பதனால் பூஜைகளும் செய்கிறார்கள்.
சங்குகளில் வலம்புரி சங்கு மாத்திரம் அல்லாமல் இடம்புரி சங்கு, பாஞ்ச சன்யம் என 80 இற்கும் அதிக வகைகள் காணப்படுகின்றன.
பண்டைய காலங்களில் இந்த 80 வகையிலான சங்குகளும் ஒவ்வொரு வகையிலான தேவைகளுக்கு பயன்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
தற்களத்தினை பொறுத்தளவில் ஒரு சில சங்கு வகைகளினை காண்பதுவே அரிதாக இருக்கின்றது. இதற்கு கடல்வாழ் உயிரினங்கள் அருகி வருவதுவும் ஒரு பிரதான காரணம் ஆகும்.