கணவரை விவாகரத்து செய்வது உண்மையா? காரணம் இது தான்... சங்கீதா கொடுத்த விளக்கம்
நடிகை சங்கீதா மற்றும் பாடகர் கிரிஷ் தம்பதிகள் விவாகரத்து செய்யப்போவதாக அண்மையில் தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இந்நிலையில் சங்கீதா இது குறித்து விளக்கதளித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சங்கீதா- கிரிஷ்
தமிழ் சினிமாவில் 'காதலே நிம்மதி' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சங்கீதா. அதனை தொடந்து இவர் நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள் தோல்வியை தழுவியது.
ஆனால் 2003 ஆம் ஆண்டு வெளியான பிதாமகன் படத்தில் விக்ரம் ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அதன்பின் உயிர், தனம் போன்ற படங்களில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி குணச்சித்திர நடிகையாக வலம் வருகிறார். சங்கீதா, மலையாள படங்களில் பிசியாக இருந்த சமயம் அது. ஒரு விருது விழாவில், பிரபல பின்னணி பாடகர் கிரிஷை சந்தித்தார்.
சில மாதங்கள் டேட்டிங் செய்த இவர்கள் பின்பு 2009ஆம் ஆண்டு திருவண்ணாமலை கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இப்போது அவர்களுக்கு ஒரு பெண் பிள்ளையும் இருக்கிறார்.
இவர் இறுதியாக தமிழில் விஜய் நடித்த வாரிசு படத்தில் அவருக்கு அண்ணியாக நடித்திருந்தார். தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பிசியாக வலம் வருகிறார்.
விவாகரத்து சர்ச்சை
இந்நிலையில் அண்மையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயரை சங்கீதா கிரிஷ் என்பதிலிருந்து சங்கீதா ஆக்டர் என அவர் மாற்றி இருக்கியிருந்தார்.
அதனால் சங்கீதா தனது கணவரை விவாகரத்து செய்யப்போகின்றாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்ததுடன், குறித்த விடயம் இணையத்தில் வைரலாகி புதிய புயலையே கிளப்பியது.
இந்நிலையில் பெயர் மாற்றத்துக்கான காரணம் குறித்து சங்கீதா தற்போது விளக்கம் கொடுத்திருப்பதாக தவல்கள் வெளியாகியுள்ளது.
இவர் இன்டாகிராமில் பெயர் மாற்றம் செய்தது நியூமராலஜி (எண்கணித ஜோதிடம்) காரணத்துக்காக தானாம். கணவரை பிரிவதாக வெளிவரும் செய்திகள் வெறும் வதந்திகள் தான். இதில் எவ்வித உண்மையும் இல்லை என விளக்கமளித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
