Sandhya Raagam: புவனேஷ்வரி சதியிலிருந்து மீண்டு வந்த ரகுராம்... மகளை ஏற்றுக்கொள்வாரா?
சந்தியா ராகம் சீரியலில் புவனேஷ்வரியின் சதியிலிருந்து ரகுராம் மீண்டு உயிர்பிழைத்த நிலையில், தனத்தை மறுபடியும் ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சந்தியாராகம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சந்தியாராகம் சீரியல் ரசிகர்களை கவர்ந்த சீரியலாக இருக்கின்றது. இதன் கதைக்களம் மிகவும் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் செல்கின்றது.
ஒரு உயிராக வாழ்ந்து வந்த அக்கா தங்கைகள், திருமணத்தால் பிரிந்தாலும், அவர்களின் பிள்ளைகள் தற்போது அக்கா தங்கைகளாக வாழ்ந்து வரும் கதையைக் கொண்டுள்ளது.
தனத்திற்கு வரும் ஒவ்வொரு பிரச்சனையையும் மாயா சரி செய்வதுடன், இது ரகுராமிற்கு தெரியாமலும் பார்த்துக் கொள்கின்றார்.
ஆனால் மாயாவை தவறாக புரிந்து கொண்ட ரகுராம் அவர் மீது கோபமாக இருந்து வருகின்றார். இந்நிலையில் தனம் கொடுத்துவிட்ட கோவில் பிரசாதத்தில் புவனேஷ்வரி விஷம் கலந்துள்ள நிலையில், ரகுராம் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகின்றார்.
பின்பு ஜானகி வேண்டுதல் செய்து கடவுளிடம் முறையிடுகின்றார். எப்படியோ புவனேஷ்வரியின் திட்டத்தினை முறியடித்து ரகுராமை குடும்பத்தினர் உயிர்பிழைக்க வைத்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |