Sandhya Raagam: ரகுராமை கத்தியால் குத்த வந்த பூசாரி! பூஜையை முடித்த தனம்
சந்தியா ராகம் சீரியலில் தனம் அப்பாவின் உயிரைக் காப்பாற்ற பூஜை செய்த நிலையில், கார்த்தியை போலிசார் கைது செய்துள்ளனர்.
சந்தியாராகம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சந்தியாராகம் சீரியல் ரசிகர்களை கவர்ந்த சீரியலாக இருக்கின்றது. இதன் கதைக்களம் மிகவும் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் செல்கின்றது.
ஒரு உயிராக வாழ்ந்து வந்த அக்கா தங்கைகள், திருமணத்தால் பிரிந்தாலும், அவர்களின் பிள்ளைகள் தற்போது அக்கா தங்கைகளாக வாழ்ந்து வரும் கதையைக் கொண்டுள்ளது.
தனத்திற்கு வரும் ஒவ்வொரு பிரச்சனையின் போதும் மாயா தான் அவரைக் காப்பாற்றுகின்றார். இது ரகுராமிற்கு தெரியாமல் இதை செய்து வரும் மாயா கெட்டப்பெயர் எடுத்து வருகின்றார்.
தற்போது ரகுராம் உயிருக்கு ஆபத்து என்பதால் பூஜை ஒன்றினை செய்வதற்கு மாயா, தனாவை ரகுராம் வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் அழைத்து வந்துள்ளார்.
மற்றொரு புறம் கார்த்தியை போலிசார் கைது செய்துள்ள நிலையில், புவனேஷ்வரி ரகுராமை கொலை செய்ய ஆள் அனுப்பியுள்ளார்.
ரகுராமிற்கு இந்த பிரச்சனை எதுவும் தெரியாமல் பூஜையை முடித்துள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
