Sandhya Raagam: மாஸாக வந்து கார்த்திக்கை கதறவிட்ட மாயா... அடுத்த கட்டத்திற்கு சென்ற கதிர்
சந்தியா ராகம் சீரியலில் மாயா முதன்முறையாக சமைத்துள்ள நிலையில், மற்றொரு புறம் கதிரின் தொழிலுக்கு மிகப்பெரிய உதவியையும் செய்துள்ளார்.
சந்தியாராகம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சந்தியாராகம் சீரியல் ரசிகர்களை கவர்ந்த சீரியலாக இருக்கின்றது. இதன் கதைக்களம் மிகவும் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் செல்கின்றது.
ஒரு உயிராக வாழ்ந்து வந்த அக்கா தங்கைகள், திருமணத்தால் பிரிந்தாலும், அவர்களின் பிள்ளைகள் தற்போது அக்கா தங்கைகளாக வாழ்ந்து வரும் கதையைக் கொண்டுள்ளது.
தனத்திற்கு வரும் ஒவ்வொரு பிரச்சனையின் போதும் மாயா தான் அவரைக் காப்பாற்றுகின்றார். இது ரகுராமிற்கு தெரியாமல் இதை செய்து வரும் மாயா கெட்டப்பெயர் எடுத்து வருகின்றார்.
தனத்திற்கு மட்டுமின்றி குடும்பம் பிரியாமல் இருப்பதற்கு என்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் மாயா செய்து வருகின்றார்.
தற்போது கதிர் தொழிலில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு மாயா உதவி செய்துள்ளார். மேலும் காணொளியினை வெளியிட வந்த கார்த்திக்குக்கும் சரியான பதிலடியைக் கொதித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
