அக்கா- தம்பி உறவா இது..? பூர்ணிமா - நிக்ஷனை கழுவி ஊற்றும் பிக்பாஸ் நடிகை- வைரல் பதிவு
பூர்ணிமா - நிக்ஷனை கழுவி ஊற்றும் பிக்பாஸ் நடிகையின் போஸ்ட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ்
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
மற்ற சீசன்கள் போல் அல்லாமல் இந்த சீசனில் நாட்கள் மளமளவென 75 நாட்களை கடந்து விட்டது. ஆனாலும் போட்டியாளர்கள் தங்களிடம் உள்ள வன்மத்தை வைத்து நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அத்துடன் அடிக்கடி போட்டியாளர்கள் ஏதாவது சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்கள். இதனால் சமூக வலைத்தளங்களில் பிக்பாஸ் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது.
பிரதீப் ஆண்டனி நிகழ்ச்சியை விட்டு சென்ற பிறகு இந்நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்க்கமாட்டார்கள் என்று தான் பேசப்பட்டது.
கழுவி ஊற்றும் ரசிகர்கள்
இந்த நிலையில் அக்கா - தம்பி என பாசமழையை பொழிந்து வந்த பூர்ணிமா - நிக்ஷன் ஆகிய இருவரும் ஜோடியாக இணைந்து நடனம் ஆடியுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் பெண்கள் விடயத்தில் அதிகமாக விமர்சிக்கப்படும் போட்டியாளராக நிக்ஷன் மாறி விட்டார்.
இது போன்ற ஒரு நிலையில் இருவரும் ஜோடியாக நடனம் ஆடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வீடியோவை பார்த்த பலர், “ இவர்கள் தான் அக்கா - தம்பியா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
#Poornima promoted #Nixen as 2nd week boyfriend..as she said in LIVE.
— Sanam Shetty (@ungalsanam) December 27, 2023
But weren't they calling each other as Akka, Thambi till very recently??
Fun content nu solluvanga adhane?#noethics #noexpectations #BiggBossTamilSeason7
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |