கல்யாணமாகிடுச்சா? ரசிகர் கேட்ட கேள்விக்கு சனம் சொன்ன பதில்
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் போட்டியாளரான சனம் ஷெட்டி தனது நெற்றி வகிடில் குங்குமப் பொட்டு வைத்திருப்பதை பார்த்த ரசிகர் ஒருவர், உங்களுக்கு கல்யாணமாகிடுச்சா? என கேட்டதற்கு, சனம் ஷெட்டி பதில் அளித்துள்ளார்.
ஆஹா.. நிறைய பேர் என்னிடம் இதே கேள்வியைத்தான் கேட்கிறாங்க.. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை நண்பர்களே, உங்கள் ஆசியுடன் கூடிய விரைவிலேயே திருமணம் ஆகும் என நினைக்கிறேன். எங்க குடும்பத்தில் உச்சந்தலை வகிடில் குங்குமப் பொட்டு வைப்பது இயல்பான ஒன்று, திருமணம் ஆனவர், ஆகாதவர் என அனைவரும் வைப்போம் என்றார்.
தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் குங்குமம் வைப்பது ஏன் என்றும் சனம் ஷெட்டி விளக்கிய நிலையில், அந்த ரசிகரின் ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட ரசிகர்கள், அவங்க கன்னடர் நண்பரே, கர்நாடகாவில் திருமணம் ஆகாத பெண்களும் நெற்றி வகிடில் குங்குமம் வைக்கும் வழக்கும் உள்ளது என விளக்கி உள்ளனர்.