சனம்ஷெட்டிக்கு முகம்சுழிக்கும் விதமாக வந்த மெசேஜ்: சிக்கியது யார் தெரியுமா?
நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கல்லூரி மாணவன் அடையாறு சைபர் க்ரைம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகை சனம் ஷெட்டி பிக் பாஸில் கலந்து கொண்டு பிரபலமானவர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ள இவர் மாடலிங், விளம்பரம் என பிஸியாக உள்ளார்.
அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார். .
இந்த சூழலில் நடிகை சனம் செட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அடையாறு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் தனக்கு வந்த ஆபாச மெசேஜ் அடங்கிய ஆதாரங்களை இணைத்து, தனக்கு தினமும் ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சனம் ஷெட்டியின் புகாருக்கு விசாரணை மேற்கொண்ட பொலிசார், கல்லூரி மாணவர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். இவர் இன்ஸ்டாகிராமில் ஆபாச மெசேஜ் அனுப்பியவர். திருச்சியை சேர்ந்த ராய் ஜான்பால் என்ற மாணவனை சைபர் கிரைம் பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.