விவாகரத்து சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமான சம்யுக்தா... பதிலடி கொடுக்கும் வகையில் சொன்ன குட்நியூஸ்
சம்யுக்தா - விஷ்ணுகாந்த் விவாகரத்து சர்ச்சையில் பல நாட்களில் ட்ரெண்டில் இருந்த சம்யுக்தா தற்போது குட்நியூஸ் ஒன்றை காணொளியாக வெளியிட்டிருக்கிறார்.
சம்யுக்தா - விஷ்ணுகாந்த்
சினிமாவில் காதல் திருமணம் என்றால் பஞ்சம் இல்லாத அளவிற்கு ஆகிவிட்டது. அப்போதைய சினிமாவில் தொடங்கி இன்றைக்கு வரைக்கும் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது.
அந்தவகையில் பிரபல தொலைக்காட்சியில் சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்து வந்தவர்கள் தான் சம்யுக்தா - விஷ்ணுகாந்த். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த மார்ச் மாதம் தான் திருமணம் செய்துக் கொண்டார்கள்.
இந்நிலையில் இவர்களின் விவாகரத்து சர்ச்சை பல கோணங்களில் சென்றுக்கொண்டிருந்தது. இதற்காக பல மீடியாக்களிலும் இருவரும் மாறி மாறி பல ஆதாரங்களை காட்டி தன் பக்க நியாயங்களைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.
சம்யுக்தா சொன்ன குட்நியூஸ்
இந்நிலையில், சம்யுக்தா தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை பதிவிட்டிருக்கிறார்.
அந்த பதிவில், சொந்தப் பணத்தில் புத்தம் புதிய கார் வாங்குவது என்பது பலருக்கும் கனவாகவே உள்ளது. இதனால் எனது முதல் லட்சியம் நிறைவேறிய மகிழ்ச்சியில் உள்ளேன். 3 வருட விடாமுயற்சி. இப்போது நான் என் சபதத்தில் வெற்றி பெற்றுள்ளேன்.
எனவே இன்று எனக்கு ஒரு பெரிய நாள். உண்மையில் இந்த மகிழ்ச்சியை அளவிட என்னிடம் வார்த்தைகள் இல்லை என பதிவிட்டிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |