பெற்ற குழந்தைகள் என்று கூட பார்க்காமல் தாய் செய்த கொடூரம் - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!
கேரளா அருகே கணவன் இறந்ததால் 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் அனூப் (33). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு அஞ்சு (29) என்ற மனைவியும், ஆதிரா (7) என்ற மகளும் அனூஷ் (3) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜுலை மாதம் அனூப் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் மனவேதனையில் அஞ்சு இருந்து வந்தார். கணவர் இறந்து துக்கம் தாளாமல் மன உளைச்சில் இருந்த அஞ்சு விபரீத முடிவு எடுத்தார். நேற்று மாலை தனது வீட்டில் இருந்த அஞ்சு தன் மீதும், தனது குழந்தைகள் மீதும் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொளுத்தியிருக்கிறார்.
தீ மளமளவென இவர்களின் உடலில் பற்றி எரிந்ததால், இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால், அவர்கள் வந்து காப்பாற்றுவதற்குள் இவர்களின் 3 பேரின் உடல் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரின் பிரிவை ஏற்க மறுத்த தாய் தனது குழந்தைகளுடன் தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
