2 கிலோ மீட்டர் தூரம் உள் வாங்கிய கடல் : மக்கள் பெரும் அதிர்ச்சி!
ஆந்திராவில் கடலோரத்தில் 2 கிலோ மீட்டர் தூரம் வரை கடல் உள்வாங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அந்தர்வேதி சமீபத்தில் வங்காள விரிகுடா நேற்று சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை உள்வாங்கியது. அந்தர்வேதி பகுதியில் கோதாவரி நதி, வங்கக் கடலில் கலந்து ஒன்று சேர்கிறது.
இந்தப் பகுதியில் ஏராளமானோர் புனித நீராடுவார்கள். இந்நிலையில், நேற்று திடீரென்று அங்கு கடல் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்வாங்கி தரை தெரிய தொடங்கியுள்ளது. மேலும், சில இடங்களில் கடல் அலையின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது. இப்படி கடலில் வெவ்வேறு நிலைகள் காணப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து காணப்பட்டனர்.
