சாம்சங் S23 FE மொபைலின் அட்டகாசமான அம்சங்கள்... எதிர்பார்ப்பில் பயனர்கள்
சாம்சங் புதிய மாடலான Galaxy S23 FEமொபைலின் அட்டகாசமான அம்சங்கள் மற்றும் வெளியீட்டு தேதி மற்றும் விலை முதலிய விபரங்கள் வெளியாக உள்ளது.
சாம்சங் Galaxy
தென் கொரிய நிறுவனமான சாம்சங் புதிதாக அறிமுகப்படுத்திய மொபைல் போன்கள் பயனர்களின் பாராட்டை பெற்றுள்ளது.
பிப்ரவரியில், கேலக்ஸி எஸ் 23 அல்ட்ரா உட்பட அதன் எஸ் 23 சீரீஸ் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தியது.
சாம்சங் நிறுவனம் அதன் மடிப்பு மொபைல்களான கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 மற்றும் ஃபிளிப் 5 ஆகியவற்றையும் வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சாம்சங் ஸ்மார்ட்போன் - Galaxy S23 FE குறித்த தகவல்கள் அவ்வப்போது அதிகமாக வலம்வந்த நிலையில், இதன் உண்மை தகவல் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. ஆனால் அடுத்த மாதம் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தகவலை வெளியிட்டவர் யார்?
தொழில்நுட்பத் தகவல்களை அவ்வப்போது லீக் செய்துவரும் யோகேஷ் ப்ரார் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், புதிய Samsung Galaxy S23 FE ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் வெளியிடப்படலாம் என்று கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் சாம்சங் மொபைல் நிறுவன துணைத் தலைவர் ஜஸ்டின் ஹியூம் ஒரு நேர்காணலில் இந்த ஸ்மார்ட்போன் சீக்கிரம் வெளிவரும் என்று கூறியிருந்தது, தற்போது இந்த தகவலால் உறுதியாகியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஃப்.ஈ, ஸ்மார்ட்போனோ் 6.4-இன்ச் FHD+ டைனமிக் அமோலெட் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும், இரண்டு வெவ்வேறு பிராசெஸர்களுடன் கூடிய இரண்டு மாடல்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதாவது ஸ்னாப்டிராகன் (Snapdragon 8 Gen 1) மற்றும் எக்ஸினோஸ் (Exynos 2200 SoC) மூலம் பிராசெஸர்கள் இருக்கும் என்று தெரிகிறது.
ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்துடன் இயங்கும் இந்த மொபைல், 8MP அல்ட்ரா வைடு மற்றும் 10MP டெலிஃபோட்டோ லென்ஸுடன் கூடிய 50MP பின்புற கேமராவுடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது.
முன்பக்கத்தில் 10MP செல்ஃபி கேமரா இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைல் 4,500mAh பேட்டரியுடன் 25W வேகமான சார்ஜிங் வசதியுடன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், பயனர்கள் சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.