Samsung Galaxy F15 5G ; பட்ஜெட் விலை எவ்வளவு தெரியுமா?
சாம்சங் நிறுவனத்தில் கேலக்ஸி F15 5G மொபைல் போன் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், இதன் விலையை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சாம்சங் கேலக்ஸி F15 5G
Samsung நிறுவனத்தின் Galacy F15 5G, சமீபத்திய F சீரிஸ் ஸ்மார்ட் போனாக நேற்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய கைபேசி 90Hz AMOLED திரை மற்றும் MediaTek Dimensity 6100+ SoCல் இயங்குவது குறிப்பிடத்தக்கது. மேலும் Galaxy F15 5G ஸ்மார்ட் போன் ஆஷ் பிளாக், க்ரூவி வயலட் மற்றும் ஜாஸ்ஸி கிரீன் என மூன்று வண்ணங்களில் கிடைக்கின்றது.
இரண்டு நாட்கள் வரை பயன்படுத்தப்படுதற்காக பெரிய பேட்டரியில் அதிக பவர் தன்மை கொண்டுள்ளது.
ஆனால் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்ட Galaxy A15 5Gன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக Galaxy F15 5Gஇருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
4ஜிபி RAM மற்றும் 128ஜிபி ROM என்ற பேசிக் மாடல் 12,999 என்ற விலைக்கு விற்பனையாகிறது. அதே போல 6ஜிபி RAM மற்றும் 128ஜிபி ROM மாடலிலும் கிடைக்கிறது, இதன் விலை ரூ. 14,499 ஆகும்.
கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படு்த்தப்பட்ட Galaxy A15 5G-ன் ஆரம்ப விலை சுமார் 19,499 என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |