மலிவு விலையில் Samsung Fold Smart Phone.... அதிரடியாக வெளியாகும் இரண்டு மொடல்
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் அதிகமாக பிரபலமாகி வரும் நிலையில்.சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது.
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள்
சாம்சங் நிறுவத்தின் அன்பேக்டு நிகழ்ச்சியில் இந்த அறிமுகம் நடைபெற உள்ளதாக கூறப்படுகின்றது. ஹூவாய், ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்களின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களிடம் சாங்சங் நிறுவனம் போட்டியை எதிர்கொள்கிறது.
அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் புதிய சீரிசை அறிமுகம் செய்ய இருக்கின்றதாம்.

சாம்சங் நிறுவனமானது தற்போது இரண்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யதாகவும், அதில் ஒன்று அல்ட்ரா பிராண்டிங் மற்றும் மற்றொரு ஸ்மார்ட் போனானது குறைந்த விலையில் கிடைக்குமாம்.
கொரிய நிறுவனமான சிசா ஜரனல் சாங்கங் நிறுவனம் குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட்போன்களை இந்த வருடத்திலேயே அறிமுகம் செய்ய உள்ளதாக தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும் குறித்த போன் பட்ஜெட் விலையிலும், கமெரா மற்றும் இதர அம்சங்களும் நல்ல தரத்துடன் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் விலை 800 டொலர்கள் என்றும் இந்திய மதிப்பில் 66 ஆயிரத்திலிருந்து தொடங்கும் என்றும், இவை தற்போது விற்பனை செய்யப்படும் Galaxy Fold 5 ஸ்மார்ட்போனின் விலையினை விட 50 சதவீதம் குறைவு எனவும் தெரியவந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |