சூரியனும் சனியும் நேருக்கு நேர் சேர்த்து கொடுக்கும் சமசப்தக யோகம்: நல்லநேரம் கைகூடி வரும் அதிஷ்ட ராசிக்காரர்கள்
வேத ஜோதிடத்தின் படி கிரகங்களின் ராஜா என அழைக்கப்படுவது சூரியன் தான் அதேபோல நீதியின் கடவுளாக போற்றப்படுவது இந்த சனிபகவான் இவர்கள் இருவரும் சேர்ந்து சில ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைக் கொடுக்கப்போகிறார்.
அதாவது சூரியனின் சொந்த ராசியான சிம்ம ராசியில் இருக்கிறார் அதேபோல சனி பகவானும் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இருக்கிறார். அதனால் இவர்கள் இருவரும் ஒன்றிலிருந்து ஒன்றும் 7ஆம் வீட்டில் இருக்கும் நிலை உருவாகியிருப்பதால் சமசப்தக யோகம் உருவாகியிருக்கிறது.
இவ்வாறு உருவாகும் யோகத்தின் தாக்கத்தில் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும் சில தாக்கத்திற்கு தீங்கும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதில் நன்மையைப் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை பார்க்கலாம்.
மேஷராசி
இந்த ராசிக்காரர்களுக்கு இந்த சமசப்தக யோகத்தில் தொழிலில் சிறப்பான பலன்களைப் பெறப்போகிறீர்கள். ஊதியக் கொடுப்பனவுகள் அதிகரிக்கும். முதலீடு செய்ய இருப்பவர்கள் இந்த யோக நேரத்தில் முதலீடு செய்யலாம். குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும், ஆரோக்கியமும் சிறக்கும்.
சிம்மராசி
சமசப்தக யோகத்தில் சிம்மராசிக்காரர்களுக்கு அதிகபட்ச நற்பலன்களை பெற போகிறார்கள். இந்த யோகத்தினால் தொழில் புரியும் இடத்தில் புதிய பொறுப்புக்களும் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெறுவார்கள் மேலும், நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் பணிகளும் பிரச்சினைகளும் தற்போது முடிவிற்கு வரும்.
கடகராசி
சமசப்தக யோகத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை மேம்படும். சொத்து விடயங்களில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது நல்ல நேரம். பழைய நண்பர்களை விரைவில் சந்திப்பீர்கள். போட்டித் தேர்வுகளிலும் வெற்றிப் பெறுவீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |