ஓரினச்சேர்க்கை தம்பதியினர்- முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக அறிவிப்பு! ட்ரெண்டாகும் வீடியோ காட்சி
ஓரின சேர்க்கையின் மூலம் திருமணம் கொண்ட இரண்டு ஆண்கள் தன்னுடைய முதல் குழந்தைக்காக எதிர்பார்த்துக் காத்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார்கள்.
ஓரின திருமணங்கள்
இந்திய – அமெரிக்கர்களான இரண்டு ஆண்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் இடம்பெற்றுள்ளது. இவர்களின் திருமணம் பொதுவாக நாம் செய்யும் திருமணம் போல் இடம்பெற்றுள்ளது.
மேலும் அமெரிக்காவில் நியூஜெர்ஸி பகுதியை சேர்ந்த அமித்ஷா என்பவரும் மற்றும் ஆதித்யா மடிராஜு என்பவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளார்கள். இவர்களில் அமித்ஷா “ஸ்ப்ரிட்” என்ற நடனக்குழுவின் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இதனை தொடர்ந்து சிறிதுக்காலத்திற்கு பின்னர் ஆதித்யாவும் பேரிடர் மேலாண்மை குழுவில் பணியாற்றி வந்திருக்கிறார்.
காதல் உணர்வு
நாளடைவில் இவர்களின் நட்பு கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் காதலாக மாறியுள்ளது. இவர்களின் நெருக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இது குறித்து இருவரும் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்து வீட்டாரிடம் கூறியுள்ளார்கள். ஆனால் குடும்பத்தினர் இதற்கு ஓப்புதல் தரவில்லை.
இதனால் இருவரும் தனியாக வெளியே வந்து கடந்த 2019 ஆம் ஆண்டு பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துக் கொண்டுள்ளார்கள்.
குழந்தைக்காக காத்திருப்பு
இந்நிலையில் தற்போது இருவரும் தன்னுடைய முதல் குழந்தையை எதிர்வரும் மே மாதம் எதிர்பார்த்து காத்திருப்பதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
இவர்களின் விந்தணுக்களை எடுத்து ஒரு பெண்ணின் கருவறையில் செலுத்தி அதன் மூலம் இவர்களின் இருவரின் குழந்தையை பெற்றுக் கொள்ள போகிறார்கள்.
இது தொடர்பில் ஆதித்யா கூறுகையில், "ஒரே பாலின ஜோடியாக இருந்தாலும் பரவாயில்லை, நாங்கள் விரும்பும் வாழ்க்கையை வாழ்கிறோம். மேலும் நாங்கள் சிறந்த பெற்றோராக இருப்போம். எங்களிலிருந்து ஒரு புதிய பரம்பரை தொடரட்டும்" என தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் இவர்களின் குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.