சிறுத்தை இருப்பதை எச்சரித்து ஒலி எழுப்பும் சாம்பர் மான்... என்ன ஒரு தைரியம்ன்னு பாருங்க
சிறுத்தை இருப்பதை உணர்ந்து தனது கூட்டத்தை எச்சரித்து ஒலி எழுப்பும் சாம்பர் மானின் அசாத்திய தைரியத்தை காட்டும் காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக சாம்பர் மான்கள் குழுவாக வாழும் தன்மை கொண்டவை அல்ல. பெரும்பாலும் தனியாகவோ அல்லது ஆறுக்கும் குறைவான சிறு குழுக்களாக வாழும்.
சிறிய குழுக்கள் முதிர்ந்த பெண் சாம்பர் மானின் தலைமையில் இயங்கும். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இம்மானினம் ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியா, டெக்சாஸ், புளோரிடா மாநிலங்களிலும், ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, தென் ஆப்பிரிக்காவிலும் அதிகமாக காணப்படுகின்றது. இம்மான்களுக்கு கடம்பை மான் என்ற பெயரும் காணப்படுகின்றது.
ஆன் மான்களுக்கு கொம்புகள் காணப்படும். ஆனால் பெண் மான்களுக்கு அவ்வாறு இருப்பதில்லை.
ஆண் மானின் கொம்புகள் வருடந்தோறும் விழுந்து புதிய கிளைகளுடன் முளைக்கும் பொதுவாக வயது அதிகதிரிக்கும் போது ஆண் மான்களின் கொம்புகளில் காணப்படும் கிளைகளும் அதிகரிக்கும்.
கொம்பு விழுந்து விட்டால் இந்த மான் மற்ற விலங்குகளின் கண்களில் படாமல் காடுகளில் மறைந்து தான் வாழும். மான் இனத்துக்கு மானம் காக்கும் தன்மை மனிதர்களை விட சற்று அதிகமாகவே இருக்கும்.
பார்ப்பதற்கு சாதுவாக இருந்தாலும் தன் உயிரை கொடுத்தாவது தனது கூட்டத்தை காக்கும் குணம் மான்களுக்கு உண்டு.
அதனை பறைசாற்றும் வகையில் சிறுத்தை இருப்பதை கண்ட சாம்பர் மான் தன் உயிரை பற்றி சற்றும் சிந்திக்காது தனது கூட்டத்தை எச்சரித்து ஒலி எழுப்பும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |