அட ஷாலின் ஷோயாவுக்கு இப்படி ஒரு அண்ணணா? வைரலாகும் காணொளி!
நடிகையும் பிரபல தொகுப்பாளினியுமான ஷாலின் ஷோயா தனது அண்ணன் மற்றும் அம்மாவை முதல் முறையாக ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த காணொளி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஷாலின் ஷோயா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரபாகிய குக் வித் கோமாளி நிகழ்சியில் கலந்துக்கொண்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டவர் தான் ஷாலின் ஷோயா.

குக் வித் கோமாளியில் சோயாவுக்கு சமையல் வரவில்லை என்றாலும் அவரின் வெகுளியான பேச்சு, அழகிய தமிழ், குறும்பு செயல்கள் என ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்னை கொடுத்தது.

இவரின் தமிழுக்கே தனி ரசிகர் பட்டாளம் இருக்கின்றது என்றால் மிகையாகாது. மேலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர் ஒரு சில குறும்படங்களையும் இயக்கியும் உள்ளார்.

குறிப்பா ஷாலின் ஷோயா நடிப்பில் வெளியாக கன்னகி திரைப்பம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது ஜீ தமிழை் தொலைக்காட்சியில் வாரம் தோறும் ஒளிபரப்பாகிவரும் சமையல் எக்ஸ்பிரஸ் சீசன் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகின்றார்.

இந்நிலையில், சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சில் முதல் முறையாக தனது அண்ணன் மற்றும் அம்மாவை ஷாலின் ஷோயா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ள எமேஷ்னல் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |