samayal express : சமையலுக்கு ரஜினியிடமிருந்து வந்த பாராட்டு! கருணாஸின் மனைவி ஓபன் டாக்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சமையல் எக்ஸ்பிரஸ் சீசன்2 நிகழ்சியில் இந்த வாரம் போட்டியாளர்களாக சீரியல் நடிகை ரித்திகா மற்றும் பாடகியும் நடிகையுமான கருணாஸின் மனைவி கிரேஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கிரேஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நாட்டு கோழி குழம்பு சமைத்து கொடுத்த அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டதுடன், பல பிரபலங்களுக்கு அன்பாக சமையல் செய்து கொடுத்த விடயம் குறித்து பேசியிருந்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

சமையல் எக்ஸ்பிரஸ் சீசன்2
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக விளங்கும் Zee தமிழ், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.
அந்த வரிசையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்த மக்களின் மனம் கவர்ந்த 'சமையல் எக்ஸ்பிரஸ்' நிகழ்ச்சியின் சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகிவருகின்றது.

கடந்த ஜூலை 6 ஆம் திகதி ஆரம்பமாகிய அந்த நிகழ்சி ஞாயிறு தோறும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகின்றது.
இந்த சீசனை ஷாலின் சோயா தொகுத்து வழங்க, பிரபல நடிகை சுஜிதா தனுஷ் முதன்மை நடுவராக பங்கேற்று வருகின்றார்.
சமையல் திறமைகளுக்கும், கலகலப்பான போட்டி சூழலுக்கும் இடமளிக்கும் வகையில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி வெற்றிநடை போட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |