பிரபல நடிகரிடம் கோடிக்கணக்கில் கடன் வாங்கிய சமந்தா: இவருக்கு இப்படியொரு பிரச்சினையா?
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா அதன் சிகிச்சைக்காக பிரபல நடிகரிடன் கடன் வாங்கியதாக ஒரு தகவல் தற்போது வைரலாகி வருகின்றது.
சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இன்றைக்கு வரைக்கும் உச்ச நடிகையாக இருந்து வருகிறார்.
சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட இவர் தெலுங்கில் முன்னணி நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
நல்ல ஜோடிகளாக வலம் வந்த இருவரும் 2021ஆம் ஆண்டு சில காரணங்களால் தங்களுடைய விவாகரத்து முடிவை அறிவித்தனர். இவர் விவாகரத்துக்கு பின்னர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.
சிகிச்சைக்காக நடிகரிடம் கடன்
நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு பெரும் பாடுபட்டு மீண்டும் வழமைக்கு திரும்பி அடுத்தடுத்து பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், நடிகை சமந்தா பிரபல தெலுங்கு ஹீரோ ஒருவரிடம் 25 கோடி கடன் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுவும் இந்த கடனை தனது சிகிச்சைக்காகத் தான் வாங்கியிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் அந்த தெலுங்கு ஹீரோ யார் என்பது பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |