இப்படி ஒரு தொழிலுக்கு இறங்கிய நடிகை சமந்தா- ஆடிப்போன ரசிகர்கள்! அது என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வரும்பவர் நடிகை சமந்தா. இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இவர் பிரபல தெலுங்கு நடிகரும், முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வரும் சமந்தா அண்மையில், இவரது நடிப்பில் தி ஃபேமிலி மேன் 2 என்ற வெப்தொடர் வெளியானது.
இந்த தொடரில் சமந்தாவின் நடிப்பு அனைவராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது. மேலும் அவருக்கு அதனை தொடர்ந்து ஏராளமான வாய்ப்புகள் குவிந்தது.
இந்நிலையில், சமந்தா பிரத்யுஷா என்ற அமைப்பின் மூலம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான மருத்துவ உதவிகளை செய்து வருகிறார். மேலும், ஈகம் என்ற பெயரில் ஹைதராபாத், ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் ஃப்ரீ ஸ்கூல் ஒன்றை நடத்தி வருகிறாராம்.
அதுமட்டுமின்றி, சில மாதங்களுக்கு முன்பு சகி என்ற பெயரில் பெண்களுக்கான டிசைனர்கள் உடைகளை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, நடிகை சமந்தா விரைவில் பெண்களுக்கான நகை மற்றும் அணிகலன்கள் தொடர்பான புதிய பிசினசை துவங்க உள்ளதாகவும் அதற்கான முதல் கட்ட பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் தற்போது தகவல்கள் பரவி வருகிறது.