நடிகை சமந்தாவிற்கு கோயில் கட்டிய ரசிகர்!
நடிகை சமந்தாவிற்கு ரசிகர் ஒருவர் கோவில் கட்டியுள்ளார்.
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார்.
ஆனால் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதன் பிறகு சமூகவலைத்தளங்களில் தன் பெயருக்கு பின்னால் இருந்த நாகசைதன்யாவை அதிரடியாக நீக்கினார்.
சமீபத்தில் நடிகை சமந்தா மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பிறகு, உடல் நிலை மேலும் மோசமடைந்ததால் ஐதராபாத்திற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
பிறகு மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று நாடு திரும்பினார்.
சில வாரத்திற்கு முன்பு, நடிகை சமந்தாவின் ‘சகுந்தலம்’ படம் வெளியானது. இதற்கு அடுத்து, காதல் படமான “குஷி” என்ற படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.
நடிகை சமந்தாவிற்கு ரசிகர் கட்டிய கோவில்
நடிகை சமந்தாவிற்கு ரசிகர் ஒருவர் கோவில் கட்டியுள்ளார். தமிழக ரசிகர்கள் தங்களுக்கு நடிகைகளுக்குக் கோயில் கட்டும் வழக்கம். நடிகைகள் நயன்தாரா, ஹன்சிகா, நமீதா உட்பட பல நடிகைகளுக்கு தமிழகத்தில் கோயில்களை கட்டியுள்ளனர்.
தற்போது நடிகை சமந்தாவிற்கு ரசிகர் ஒருவர் கோவில் கட்டியுள்ளார். ஆந்திரா மாநிலம், பாபட்லா அருகே உள்ள ஆலபாடு கிராமத்தில் சமந்தா என்ற பெயரில் கோவிலை கட்டி முடித்துள்ளார்.
தற்போது இக்கோவிலின் பணிகள் நிறைவடைந்த நிலையில் நாளை திறக்க இருக்கிறார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அந்த ரசிகர் கட்டப்பட்டுள்ள சமந்தா சிலையை இதுவரை பார்க்கவே இல்லையாம். இந்தக் கோவிலில் சமந்தாவின் தலையில் ஒரு பெரிய சிலை இருக்கும்.
Samantha's fan builds a temple for her in Andhra Pradesh. See pics Samanthas fan builds a temple for her in Andhra Pradesh See pics https://t.co/pJssBIGJVf. pic.twitter.com/gZeI4CVZY6
— JOB MELA (@alokbha59102427) April 27, 2023
Fan-tastic devotion! ? Telugu superstar Samantha Ruth Prabhu gets her own 'temple' built by an adoring fan in his home ?. She joins the ranks of celebs with such zealous followers. Cheers to her philanthropic work too! ?? #SamanthaRuthPrabhu #TempleTribute #BigWoice pic.twitter.com/hdR5aUbZgf
— Bigwoice (@bigwoice) April 27, 2023