சமந்தாவின் மானம் போய்விடும்! அந்த பிரபலம் சொன்னது என்ன?
கதாநாயகிகளில் தனக்கென ஒரு தனியிடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகை சமந்தா. தனது திறமையினாலும் அழகினாலும் ரசிகர் பட்டாளத்தை தன் வசம் வைத்திருப்பவர்.
இவர் அண்மையில் குணசேகர் இயக்கத்தில் 'சாகுந்தலம்' எனும் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படம் திரைக்கு வந்து 60 கோடி பட்ஜெட்டில் வெறும் 10 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
image - TheLallontop
இதனால் இத் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இதையடுத்து தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான சிட்டிபாபு, “சமந்தா தனது கதாநாயகி அந்தஸ்தை இழந்துவிட்டார். சாகுந்தலம் கதாபாத்திரத்துக்கு அவர் கொஞ்சம் கூட பொருத்தமாக இல்லை. இந்தத் திரைப்படத்துடன் அவரது சினிமா வாழ்கை முடிந்தது. அவரது நோய் எல்லாமே பொய்யான நாடகம். தனது படத்தை ஓட வைக்க போடும் நாடகம்” என்று விமர்சித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள சமந்தா, “காது மடலில் அதிகமாக முடி வளர்வதற்கு காரணம் என்ன என்று கூகுளில் தேடியபோது, அதற்கு அதிகமாக ஹோர்மோன் சுரப்பதுதான் காரணமென வந்தது. இது யாரென உங்களுக்குத் தெரியும்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
image - india.com
இதற்கு சிட்டிபாபு, “என் காதில் உள்ள முடியைப் பற்றி பேசாமல் என் வார்த்தைகளில் உள்ள நேர்மையைப் பற்றி பேசியிருக்கலாம். நான் வாய் திறந்தால் சமந்தாவின் மானம் போய்விடும்” என்று கூறியுள்ளார்.
இவ்வாறு இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டிருப்பது சினிமா வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.