சமந்தா போட்ட பதிவால் கடுப்பான மருத்துவர்- கைது செய்ய கூறி வெளியான கண்டனப் பதிவு
நடிகை சமந்தா நெபுலைசர் கருவியுடன் வெளியிட்ட புகைப்படத்திற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் எழுந்து வருகின்றது.
சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் சமந்தா.
இவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட். இதன் காரணமாக குறைந்த படங்களிலேயே டாப் இடத்தை பிடித்த விட்டார்.
சமந்தா சமிபக்காலமாக திரைப்படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் தன்னுடைய உடல்நிலை குறித்து மிகுந்த கண்காணிப்பில் இருக்கிறார்.
கடந்த 2022இல் மயோசிடிஸ் என்ற அரிய வகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த சமந்தா அதற்கு தெரபி சிகிச்சை செய்தாக காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.
விழிப்புணர்வு திட்டம்
இந்த நிலையில், சமந்தா சமீபக் காலமாக நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னேடுத்து வருகிறார்.
அந்த வகையில், நடிகை சமந்தா நெபுலைசர் கருவியை மூக்கில் வைத்தப்படி ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், “ ஒரு பொதுவான வைரஸுக்கு மருந்து கொள்ளும் ஒரு மாற்று வழியை முயற்சி செய்து பாருங்கள்.
அதில், ஒரு வழி ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையுடன் நெபுலைசர் செய்யலாம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிறையில் போட வேண்டும்
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இந்த பதிவிற்கு கண்டனம் தெரிவித்து மருத்துவர் ஒருவர் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், “ அவர் சுவாச வைரஸ் தொற்றுகளை தடுக்கவும் சிகிச்சை அளிக்கவும் ஹைட்ரஜன் பெராக்சைடு சுவாசிக்கலாம் என சமந்தா குறிப்பிட்டுள்ளார். இது முற்றிலும் தவறான கருத்து அமெரிக்காவின் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி அறக்கட்டளை நிறுவனத்தின்படி, ஹைட்ரஜன் பெராக்சைடு செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் செயற்பாடாகும். இப்படியொரு வேலை செய்வதற்கு சமந்தாவிற்கு தண்டனை அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும். இது தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்படும்.” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. அத்துடன், “ சமந்தாவின் இது போன்ற விழிப்புணர்வு செயற்திட்டம் மக்களுக்கு இனி ஆபத்தில் முடியுமா?” என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Left: Influential Indian actress Ms. Samantha Ruth who is unfortunately a health and science illiterate advising millions of her followers to inhale hydrogen-peroxide to prevent and treat respiratory viral infections.
— TheLiverDoc (@theliverdr) July 4, 2024
Right: Scientific society, The Asthma and Allergy Foundation… pic.twitter.com/Ihn2xocKUt
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |