இரண்டாவது திருமணத்திற்கு தயாரான சமந்தா! மாப்பிளை யார் தெரியுமா?
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முதல்முதலில் 'பாணா காத்தாடி' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். இவர் தொடர்ந்து நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.
சமந்தாவின் விவாகரத்து தொடர்பிலான கசிவுகள்
இவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகசைதன்யாவை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் சில வருடங்களில் சர்ச்சைகளாலும், அதிரடியான வெற்றி படங்களில் பிஸியாக இருந்ததாலும் இவரது திருமண வாழ்க்கை முறிவை சந்தித்தது. தற்போது வரை விவாகரத்துக்கு என்ன காரணம் என்பதையும் இவர்கள் வெளியிடவில்லை.
சமந்தாவின் இரண்டாவது கணவர் தொடர்பிலான உண்மைகள்
இதனையடுத்து தற்போது சமந்தாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் நடக்க உள்ளதாகவும் சமந்தாவின் ஃபேமிலி மேன் 2 படப்பிடிப்பிலிருந்து இது ஆரம்பிக்கபட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் செய்தி குறித்து சமந்தா தகவல் வெளியிட்டால் மாத்திரமே உண்மை தன்மையை அறியமுடியும்.