அந்த நிலையில் நான் இருந்த போது: வெளிப்படையாக போட்டுடைத்த சமந்தா
என்னை மோசமான நிலையிலிருந்து மீட்டு கொண்டு வந்தது தன்னுடைய நண்பர்கள் தான் என வெளிப்படையாக பேசியுள்ளார் நடிகை சமந்தா.
தமிழ், தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.
தன்னுடைய காதல் கணவர் நாகசைதன்யாவுடன் விவாகரத்தான பின்னர், ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சமந்தா, உங்கள் வீட்டில் யாராவது மன அழுத்தத்திலிருந்தால் அவர்களோடு உரையாடுங்கள். அப்போதுதான் அவர்கள் அதிலிருந்து விடுபட்டு இயல்பாக வாழ முடியும்.
எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் நிலையிலிருந்து என்னை மீட்டுக்கொண்டு வந்தது என்னுடைய நண்பர்கள்தான்.
அவர்கள் துணையில்தான் நான் அடுத்த கட்ட வெற்றியை அடைய இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.