7 அடி நீளம் வரை 'முடி' வளர்க்கும் பெண்கள்... காரணம் என்னனு தெரியுமா?
பொதுவாகவே அனைத்து பெண்களுக்கும் நீளமான மற்றும் அடத்தியான அழகிய கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
பெண்களின் நீண்ட கூந்தல் அவர்களின் பெண்மை அழகு மற்றும் வசீகரத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.
பண்டைய காலங்களில் அரச மற்றும் செல்வந்தர்கள் முடி ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்க மருந்துகளைத் தயாரிக்கவும் நிபுணர்களை நியமிப்பார்கள் என வரலாற்ற குறிப்புகள் காணப்டுகின்றது.
ஆனால் தற்காலத்தில் அதிகரித்த வேலைபழு காரணமாக நீண்ட கூந்தலை பராமரிக்க பலரும் விரும்புவது கிடையாது. அப்படியே ஆசைப்பட்டாலும் ரசாயண கூந்தல் பராமரிப்பு பொருட்களின் பாவணையால் ஆரோக்கியமான கூந்தலை பெறுவது பெரும் சவாலாக இருக்கின்றது.
ஆனால் இந்த காலத்திலும் சீனாவின் குவாங்சி ஜுவாங்கின் ஹுவாங்லுவோ கிராமத்தைச் சேர்ந்த ரெட் யாவ் பெண்கள் தலைமடிக்கு பலத்த முக்கியத்தவத்தை கொடுக்கின்றனர்.
இந்த பெண்கள் தங்கள் தலைமுடியை கிட்டத்தட்ட ஆறு அடி நீளமாக வளர்க்கிறார்கள். இப்படி இவர்கள் முடியை வளர்ப்பதற்கு அதிகமான கவனிப்பை செய்கிறார்கள்.
இந்த பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே வெட்டுவார்கள் என கூறப்படுகின்றது. இது தொடர்பில் முழுமையாக விபரங்களை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |