கொஞ்சம் கூட சாப்பிட முடியல! கண்ணீருடன் சமந்தா.. எடை குறைய இதுவா காரணம்?
நடிகை சமந்தா தற்போது மயோசிடிஸ் நோய் பாதிப்பால் தான் பட்ட துன்பங்களை கண்ணீருடன் கூறி உள்ளார்.

சமந்தா உடை குறைய காரணம்
தென்னிந்தியாவின் பிரபலமான நடிகை தான் சமந்தா.
இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது ஒரு முன்னணி கதாநாயகியாக மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில காலமாக சமந்தா மிகவும் எடை குறைந்து காணப்பட்டார். அதன்போது ரசிகர்கள் கமந்தாவிடம் 'ஏன் இவ்வளவு ஒல்லியாகிவிட்டீர்கள்?' என்று கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு சமந்தா தற்போது பதிலளித்துள்ளார்.

கண்ணீருடன் சொன்ன சமந்தா!
சமந்தாவின் எங்கள் தங்கம் படம் வெளியாக இருக்கிறது. அந்த படத்தின் புரொமோஷனில் தனக்கு வந்த 'மயோசிடிஸ்' (Myositis) என்ற ஆட்டோ இம்யூன் நோய் பற்றி பேசி உள்ளார்.
அவர் பேசும் போது 'மக்கள் என்னைப் பார்க்கும்போதெல்லாம் ஏன் இவ்வளவு எடை குறைந்துவிட்டீர்கள் என்று கேட்கிறார்கள். ஆனால் ஒருவரின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது.
எனக்கு சாப்பிட பிடிக்கவில்லை என்பதல்ல, என்னால் சாப்பிட முடியவில்லை

மேலும் சமந்தா 'அந்த நேரத்தில் நான் சாப்பிடும் உணவே என் நோயைத் தூண்டிவிடும். என் செரிமான மண்டலத்தில் சிறிய பிரச்சனை ஏற்பட்டால் கூட, என் மயோசிடிஸ் பாதிப்பு அதிகமாகிவிடும்'
அதனால், நான் மிகவும் கடுமையான டயட்டைப் பின்பற்ற வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் ஒரே மாதிரியான, ருசியே இல்லாத சப்பென்ற உணவைத்தான் சாப்பிட்டேன்' என்று மிக கவலையுடன் கண்ணீருடன் சமந்தா கூறினார்.
சமந்தாவின் செல்லப் பூனையின் பெயர் 'ஜெலாட்டோ'. இந்த பெயர் சமந்தா பூனைக்கு வைக்க காரணம் அவர் சுவையும் நிறமும் இல்லாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது மருத்துவர்கள் ஜெலட்டா என்ற ஜஸ்கிரீம் சாப்பிட சொன்னார்களாம்.
அந்த நேரத்தில் அவர் சாப்பிட்ட சுவையான உணவு என்றால் அது அந்த ஜஸ்கிரீம் தானாம். இதனால் தான் அந்த ஙாபகமாக தன்னுடைய பூனைக்கு அந்த பெயரை வைத்துள்ளாராம் சமந்தா.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |