எனது உயிருக்கு இவரால் ஆபத்து! நடிகர் சரவணன் மீது முதல் மனைவி புகார்.. நடந்தது என்ன?
நடிகர் சரவணன் தனது இரு மனைவிகளுடன் வசித்து வந்த நிலையில் தற்போது முதல் மனைவி தனது கணவரால் அவருடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக தற்போது புகார் அளித்துள்ளார்.

நடிகர் சரவணன்
90 ஸ் 80 ஸ் களின் சிறிய முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றவர் தான் நடிகர் சரவணன்.
இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். அதில் முதல் மனைவி தனது உயிருக்கு பாதுகாப்பில்லை எனக் கூறி நடிகர் சரவணன் மீது சென்னை மவுலிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சரவணன் 'வைதேகி வந்தாச்சு', 'சூரியன் சந்திரன்', 'மருது', 'பருத்திவீரன்', 'கோலாமாவு கோகிலா', 'அரண்மனை', 'ஜெயிலர்' போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2003ஆம் ஆண்டு சூர்யஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு குழந்தைகள் இல்லை. இந்த காரணத்தால் விவாகரத்து வாங்காமல் 2019-இல் ஸ்ரீதேவி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
அப்போது எந்த முரண்பாடுகளும் இல்லாமல் முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவியுடன் மாங்காடு அருகே மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக வசித்து வந்துள்னனர். ஆனால் தற்போது முதல் மனைவி கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனைவி புகார்
சரவணனின் முதல் மனைவி சூர்ய ஸ்ரீ கூறியதாவது எனக்கும், சரவணனுக்கும் திருமணமாகி குழந்தைகள் இல்லை. இதனால் சரவணன், 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
ஒரே குடியிருப்பில் தனித்தனியாக வசித்து வருகிறோம். எங்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. எனக்கு அச்சுறுத்தல்கள் இருந்து வந்ததால் வீட்டின் முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்தி இருந்தேன்.

ஆனால் எனது அனுமதி இன்றி சரவணன், ஆட்களை வைத்து அந்த கேமராவை அகற்றிவிட்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறி இருந்தார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |