எங்க அம்மா மீது எனக்கு வருத்தம் உண்டு - சமந்தா உருக்கம்
எங்க அம்மா மீது எனக்கு வருத்தம் உண்டு என்று நடிகை சமந்தா உருக்கமாக பேசியுள்ளார்.
சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார்.
இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்டனர். இந்த அறிவிப்பைப் பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து, தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் கணவர் பெயரான நாகசைதன்யாவை அதிரடியாக நீக்கினார் நடிகை சமந்தா. இதன் பிறகு, இவர்கள் இருவரும் தன்னுடைய வேலையில் மிகவும் பிஸியாக இறங்கி செயல்படத் தொடங்கினர்.
நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா -
சமீபத்தில் நடிகை சமந்தா ரசிகர்களுக்கு தான் மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் பின்பு, உடல் நிலை மேலும் மோசமடைந்ததால் ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்த சமந்தா, பிறகுமேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சமீபத்தில் நாடு திரும்பினார்.
எங்க அம்மா மீது எனக்கு வருத்தம் உண்டு
இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்திருக்கும் படம் சாகுந்தலம். இப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் சமந்தா. இந்நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் நடந்த விளம்பர நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொண்டார்.
அப்போது மலையாள படங்களிலிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். நான் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஃபஹத் ஃபாசிலின் நடிப்பை பார்த்து ரொம்ப வியந்துள்ளேன்.
ஒவ்வொரு மலையாள நடிகரும் ரொம்ப நல்லா நடித்து வருகிறார்கள். எனக்கு மலையாள படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கு. ஆனால் என்ன செய்வது எனக்கு மலையாளம் தெரியாதே. இது எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. என் அம்மா ஒரு மலையாளி.
இருந்தாலும் கூட எனக்கு மலையாளம் கற்றுக் கொடுக்காமல் விட்டுவிட்டார். அதை நினைக்கும்போது, அவர் மேல் எனக்கு வருத்தம் இருக்கிறது. மலையாள படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மலையாளம் கற்றுக் கொண்டு நானே பேசுவேன் என்றார்.