மகனுக்காக எதுவும் செய்யாத விஜய் - முன்னாள் மேனேஜர் கூறிய பகீர் தகவல்
விஜய்யின் முன்னாள் மேனேஜர் பி.டி செல்வகுமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் பற்றி பல விடயங்களை கூறி உள்ளார். இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

நடிகர் விஜய்
தமிழ் திரையலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஜய் தற்போது சினிமாவை விட்டு அரசியலில் இறங்கி உள்ளார். இவருக்கும் சங்கீதாவிற்கும் 1999ல் திருமணம் ஆனது.
சங்கீதா சுமார் 25 ஆண்டு கால திருமண உறவை முறித்துக்கொள்ளும் வகையில் சமீபத்தில் விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டிருந்தார். விவாகரத்து மனுவில் விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை தாண்டிய உறவு இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இது இணையத்தில் வைரலானது. விஜய் நடிகை த்ரிஷாடன் இந்த சர்ச்சைக்கு மத்தியில் திருமண விழா ஒன்றில் ஒரே நிற ஆடையில் கலந்துகொண்டது விஜயின் ரசிகர்களையே விஜய்க்கு எதிராக திருப்பியது.

இப்படி பல சர்ச்சைகள் நடிகர் விஜய் பற்றி அரசியல் வட்டாரத்திலும் சினிமா பக்கத்திலும் வந்துகொண்டு தான் இருக்கிறது. இதையெல்லாம் விஜய் செவி சாய்க்காமல் அவர் அவருடைய வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் தற்போது விஜய்யின் முன்னாள் மேனேஜர் விஜய் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் விஜய் மகனுக்காக விஜய் ஒன்றும் செய்யவில்லை என்பதை குறிப்பிட்டு இருக்கிறார்.

முன்னாள் மேனேஜர் பேட்டி
விஜய்க்கு, சினிமாவின் ஆரம்ப காலத்தில் இருந்து மேனேஜராக இருந்தவர், பி.டி.செல்வகுமார். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் வெளியானது.
பி.டி.செல்வகுமார் திமுக-வை சேர்ந்தவர். இவர் தற்போது விஜய்யை பற்றி பல விஷயங்களை நேர்காணலில் பேசியிருக்கிறார்.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் படம் எடுக்க ஆரம்பித்து, நான்கு வருடங்கள் ஆகிறது என கூறினார். மேலும் அவரை அழைத்து என்ன பிரச்சனை, எப்படி பட வேலைகள் போகிறது என்று விஜய் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை அவர் கூறினார்.
மேலும் இதே போல விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மட்டும் நினைத்திருந்தால் இந்த நேரத்திற்கு விஜய்யால் இவ்வளவு தூரம் வளர்ந்திருகக் முடியுமா? என்று கூறி இருந்தார். இதற்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |