நடிகை சமந்தா 10ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் என்ன தெரியுமா? படிப்பிலும் சூப்பர் தான்
நடிகை சமந்தாவின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.
நடிகை சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, தெலுங்கு மொழியிலும் கலக்கி வருகின்றார்.
இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த நிலையில், கடந்த ஆண்டு இருவரும் பிரிந்தனர்.
இவரின் பிரிவிற்கு காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள தற்போதும் கூட ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர்.
கணவரின் பிரிவிற்கு பின்பு நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சமந்தாவின், மதிப்பெண் பட்டியல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சமந்தாவின் மதிப்பெண்
சமந்தா நடிப்பில் மட்டுமின்றி படிப்பிலும் சூப்பர் என்று கூறும் அளவிற்கு அவரது மதிப்பெண் இருக்கின்றது.
ஆம் பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வில் சமந்தா 1000 மார்க்கு 887 மதிப்பெண் எடுத்து முதல் ரேங்க் எடுத்துள்ளார்.
இவரைக் குறித்து அந்த ரிப்போர்ட்டில், பள்ளியின் சொத்து என்றும் ஆசிரியர் பதிவிட்டு கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை அவதானித்த ரசிகர்கள் சமந்தாவை கொண்டாடி வருகின்றனர்.


