நான் சாகாமல் தான் இருக்கிறேன்! கண்ணீர் சிந்திய நடிகை சமந்தா: வைரல் காணொளி இதோ
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது வீடு திரும்பியுள்ளது.
எப்பொழுதும் சிரித்துக் கொண்டே பேட்டியளிக்கும் அவர் தற்போது கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணீர் பேட்டியில் கூறியது என்ன?
நடிகை சமந்தா சமீபத்தில் தனக்கு தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதற்கான சிகிச்சையில் இருப்பதாகவும் விரைவில் முழுவதும் குணமடைவேன் என்றும் கூறியிருந்தார்.
சமந்தா நடிப்பில் யசோதா என்ற பெயர் கொண்ட திரைப்படம் சில தினங்களில் வெளியாகிறது. இப்படத்திற்கான விளம்பர நிகழ்ச்சியின் போது தெலுங்கில் பேசிய சமந்தா, சமூகவலைதளத்தில் நான் சொன்னபடி சில தினங்கள் நல்ல நாட்களாகவும், சில நாட்கள் மோசமான நாட்களாகவும் இருக்கிறது.
சில நாட்களில் ஒரு அடி நடப்பது கூட எனக்கு சிரமமாக இருந்தது. ஆனால், திரும்பிப் பார்க்கும் போது நான் பல விஷயங்களைக் கடந்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் என ஆச்சரியமாகப் பார்ப்பேன்.
#Samantha opens up about handling her health issues. #Yashoda #YashodaTheMovie pic.twitter.com/r2Xc3uUuKT
— AndhraBoxOffice.Com (@AndhraBoxOffice) November 8, 2022
நான் இங்கு போராடவே இருக்கிறேன். நான் ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக சொல்ல விரும்புகிறேன். நான் உயிருக்கு ஆபத்தாக நிலையில் உள்ளதாக சில செய்திகளைப் பார்த்தேன்.
ஆனால், நான் அப்படியான நிலையில் இல்லை. இந்த கணம் வரையிலும் நான் சாகாமல்தான் இருக்கிறேன். அந்தத் தலைப்புச் செய்திகள் அவசியமானவை என நான் நினைக்கவில்லை என மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீருடன் பேசியுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் தைரியமாக இருங்கள், விரைவில் குணமடைவீர்கள் என பதிவிட்டுள்ளனர்.