சமந்தாவின் திருமணம் எந்தமுறையில் நடந்தது? தாலிக்கு பதில் அணிந்தது என்னது தெரியுமா?
நடிகை சமந்தாவின் திருமணம் எந்தமுறையில் நடைபெற்றது என்பதையும், தாலிக்கு பதிலாக அவர் அணிந்தது என்ன என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நடிகை சமந்தா
நடிகை சமந்தா கடந்த 1ம் தேதி இயக்குனர் ராஜ் நிதிமோருவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கோவை ஈஷா யோகா மையத்தில் லிங்க பைரவி கோவிலில் நடைபெற்றது. இவர்களின் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றதுடன், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
மேலும் இவர்களின் திருமணம் பூத சுத்தி திருமண முறைப்படி நடைபெற்றுள்ளது. இந்த முறையினைக் குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

பூத சுத்தி திருமணம்
பூத சுத்தி திருமணம் என்பது ஆன்மீகம் மற்றும் யோகா மரபையும் நம்பிக்கை கொண்டவர்கள் கடைபிடிக்கும் ஒரு தெய்வீக திருமண முறையாகும்.
மேலும் பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகாயம் என ஐந்து கூறுகளையும் சமநிலைப்படுத்தும் பழமையான யோக நடைமுறையினைக் கொண்டுள்ளது.
இந்த திருமண முறை தம்பதிகளுக்குள் சிந்தனை, உணர்வு, உடல், ஆன்மிக பிணைப்பு இவற்றை வலுப்படுத்த நோக்கமாக கொண்டு செய்யப்படுகின்றது.
குறித்த திருமணத்தினை திருமணமானவர்கள், திருமணம் செய்யப் போகிறவர்கள் மேற்கொள்ளலாம். ஆனால் கர்ப்பமான பெண்களுக்கு இதற்கு அனுமதி இல்லை.

தாலிக்கு பதிலாக அணிந்தது என்ன?
நடிகை சமந்தா தனது திருமணத்தின் போது தாலிக்கு பதிலாக பெண் தெய்வமான தேவியின் உருவம் பொறிக்கப்பட்ட பெண்டன்ட் ஒன்றினை திருமண சின்னமாக அணிந்திருந்தார்.
மேலும் கையில் அழகிய மோதிரம் மற்றும் கழுத்தில் கருப்பு மணிகளில் செய்யப்பட்ட பெண்டன்ட் அணிந்துள்ளார். ஆனால் தம்பதியினர் விரும்பினால் பாரம்பரிய தாலியைக் கூட அணிந்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |