இந்த 5 விடயங்களை மறக்காதீங்க.. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ எச்சரிக்கை!
சீரற்ற காலநிலை காரணமாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
டிட்வா புயலின் தாக்கத்தினால் இலங்கையில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்துள்ளனர். அத்துடன் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 465 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்னும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. லட்சக்கணக்கான மக்களை அரசாங்கம் காப்பாற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.
இது போன்று சமயத்தில் உங்களுக்குள் சில நோய்களின் தாக்கங்கள் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
உதாரணமாக, காய்ச்சல், தொற்றுக்கள், சரும தொற்றுநோய்கள் உள்ளிட்டவை கூறலாம். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் சில சுகாதார வழிகாட்டுதல்களை தெரிந்திருப்பது அவசியம்.

அப்படியாயின், வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் என்னென்ன விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
1. குடிநீர்
வெள்ளம் போன்ற அனர்த்தங்களினால் தண்ணீருக்கு அதிகமான சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தாகமாக இருக்கிறது என அசுத்தமான தண்ணீரை பருகினால் உடலுக்குள் தேவையில்லாத பிரச்சினைகள் வாய்ப்பு உள்ளது. அங்கு கிடைக்கும் தண்ணீரை கொஞ்சம் கொதிக்க வைத்து பாதுகாப்பாக வைத்து கொள்வது சிறந்தது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நீர் நிலைகளில் தண்ணீர் எடுத்தால் கொதிக்க வைத்து குடிப்பது ஆரோக்கியமானது. முடிந்தளவு சிறுவர்களை வைத்திருப்பவர்கள் இதனை கடைபிடிக்க வேண்டும்.
2. செய்திகள் கேட்க வேண்டும்.
உள்ளூர் வானிலை தகவல்கள், எச்சரிக்கைகளை நாம் செய்திகள் வாயிலாக தெரிந்து கொள்ள முடியும். தெரியாமல் சென்று ஆபத்துக்களில் சிக்கிக் கொள்வதை விட கொஞ்சம் தெளிவுடன் இருப்பது நல்லது. எப்போதும் செய்திகளை கேட்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு வரவிருக்கும் ஆபத்துக்களுக்கான முன் எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

3. கொசு இனப்பெருக்கம்
வெள்ளம் வந்த பின்னர் நிறைய இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும். அதனை நீங்கள் கண்டுக் கொள்ளாமல் இருந்தால் அதிலிருந்து இனப்பெருக்கமடையும் கொசுக்களை மலேரியா, டெங்கு போன்ற கொடிய நோய்களை பரப்பி விடும். எனவே உங்கள் கண்களுக்கு நீர்நிலைகள் தெரிந்தால் முடிந்தளவு சுத்தம் செய்ய முயற்சி எடுங்கள்.
4. உணவு பாதுகாப்பு
என்ன தான் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு கொடுத்தாலும், அதனை சுத்தமான முறையில் தயாரிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வது நல்லது. உடைமைகளை இழந்து ஓரிடத்தில் வாழும் பொழுது உடல்நல குறைபாடுகள் வந்து விட்டால் மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக் கொள்வது கடினம். முடிந்தளவு ஆரோக்கியமாக இருக்க முயற்சி செய்யுங்கள். வெள்ளத்தினால் வரும் தண்ணீர் உங்களுடைய உணவு பொருட்களை சேதப்படுத்தாமல் பார்த்து கொள்ளுங்கள்.

5. அடிக்கடி கைகளை கழுவவும்
சோப்பு மற்றும் சுத்தமான நீர் கொண்டு அடிக்கடி கைகளை கழுவது நல்லது. ஏனெனின் தொற்றுக்கள் உங்கள் கை வாயிலாக உடலுக்குள் சென்று விடும். சமைப்பதற்கு முன்னர், சாப்பாட்டிற்கு முன்னர், குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவதற்கு முன்னர் என முக்கியமான சந்தர்ப்பங்களை கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |