சமந்தாவின் தற்போதைய நிலை என்ன? புத்தாண்டு வாழ்த்து கூறியபடி அவர் வெளியிட்ட புகைப்படம்
புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தனது சமீபத்திய புகைப்படத்தை நடிகை சமந்தா வெளியிட்டுள்ளார்.
விவாகரத்து
இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக சமந்தா இருக்கிறார். இவருக்கும் நடிகர் நாக சைதன்யாவுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் ஒருகட்டத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதனிடையில் சமந்தா மயோசிட்டிஸ் எனும் நோய் காரணமாக பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் படுத்த படுக்கையாகிவிட்டார் என்பது போல பல தகவல்கள் சமூகவலைதளங்களில் வந்தன.
புத்தாண்டு வாழ்த்து
இந்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் சமந்தா தனது புகைப்படத்தை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். செயல்பாடு முன்னோக்கி... நம்மால் முடிந்ததைக் கட்டுப்படுத்துங்கள்!! புதிய மற்றும் எளிதான தீர்மானங்களுக்கான நேரம் இது என்று யூகிக்கவும்.. நம்மீது அன்பாகவும் மென்மையாகவும் இருக்கும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும். இனிய 2023!!" என சமந்தா பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் அழகிய பெண்ணான நடிகை சமந்தாவின் கன்னங்கள் சிறிது டல் அடித்து இருப்பது போல தெரிந்தாலும் நோய் பாதிப்பில் இருந்து மீண்டும் குணமடைந்து வருவது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
Function forward…
— Samantha (@Samanthaprabhu2) December 29, 2022
Control what we can!!
Guess it’s time for newer and easier resolutions.. ones that are kinder and gentler on ourselves.
God bless ??
Happy 2023!! pic.twitter.com/AcPMlkoeo8