பலமுறை அழைத்தும் வராத பானுபிரியா... உண்மையை வெளிப்படுத்திய குஷ்பு!
80-களில் தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகைகள் இன்று வரை ரீயூனியன் நிகழ்ச்சிகள் மூலம் சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால், அந்த சந்திப்புகளில் நடிகை பானுபிரியாவை பெரியளவில் காணமுடிவதில்லை. இதற்கான காரணம் குறித்து நடிகை குஷ்பு சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார்.

நடிகை பானுபிரியா
80 மற்றும் 90-களில் தென்னிந்திய திரையுலகை ஆட்சி செய்த முன்னணி நடிகைகளில் பானுபிரியாவும் ஒருவர். தனது அழகு, திறமையான நடிப்பு மற்றும் அபாரமான நடனத் திறமையால் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார். இவருக்கு இன்றளவும் ரசிகரை்கள் இருக்கின்றார்கள்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிப் படங்களிலும் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

குறிப்பாக, முன்னணி நடிகர்களுக்கு இணையாக நடனமாடும் திறன் கொண்ட நடிகைகளில் பானுபிரியா முக்கியமானவர் எனப் பாராட்டப்பட்டார்.
பானுப்பிரியா குறித்து குஷ்பு
இந்நிலையில், சமீபத்திய பேட்டியொன்றில் பானுபிரியா ஏன் ரீயூனியன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்பது குறித்து குஷ்பு கூறுகையில், “நாங்கள் பானுபிரியாவை இரண்டு ,மூன்று முறை ரீயூனியன் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தோம்.

ஆனால் அவர் வரவில்லை. பொதுவாகவே அவர் யாரிடமும் எளிதில் பழகும் குணம் கொண்டவர் அல்ல. படப்பிடிப்பு தளங்களிலும் பெரும்பாலும் தனியாகவே இருக்க விரும்பவார்.
இன்னும் சொல்லப்போனால், சினிமா துறையில் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் யார் என்று கேட்டால், யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அவர் எப்போதும் அனைவரிடமிருந்தும் சற்று விலகியே இருப்பார்” என வெளிப்படையாக பேசியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |