சமந்தாவை குறி வைத்து தாக்கும் ஆபத்தான நோய்! அவரின் தற்போதைய நிலை...தீயாய் பரவும் புகைப்படங்கள்
நடிகை சமந்தா மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் பாதிப்பால் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றாராம்.
சினிமா உலகில் பல ஆண்டு காலமாகமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா.
அதிலும் இவர் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் திடீரென நடிகை சமந்தா தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் தனக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்து பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.
கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா
அதில் அவர், எனக்கு மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயின் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதிலிருந்து குணமடைய எனக்கு கொஞ்சம் காலம் தேவைப்படுகிறது.
ஆனால், கூடிய விரைவில் நான் குணமடைந்து நலமுடன் திரும்புவேன் என்று நடிகை சமந்தா குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய கடவுளை வேண்டி வருகின்றனர்.
— Samantha (@Samanthaprabhu2) October 29, 2022