நடக்க கூட முடியாமல் கஷ்டப்படுகிறாரா சமந்தா? அதிர்ச்சியூட்டும் தகவல்
மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா நடக்கக்கூடி முடியாமல் கஷ்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மயோசிடிஸ் நோய்
சென்னையை சேர்ந்த சமந்தா தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த யசோதா படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி அதிர்ச்சியளித்தார்.
உடல்நிலை மோசமா?
இவரது இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மீண்டு வரவேண்டுமென கமெண்டுகளை பதிவிட்டனர்.
இதுதொடர்பாகவும், யசோதா படம்குறித்தும் சமந்தா அளித்த பேட்டி வைரலானது.
இந்நிலையில் சமந்தாவின் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்தன.
இது உண்மையில்லை என்றும், சமந்தா வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகவும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே நடக்ககூட முடியாத நிலையில் சமந்தா கஷ்டப்பட்டு வருவதாக மூத்த பத்திரிக்கையாளர்கள் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை கேட்ட சமந்தாவின் ரசிகர்கள் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.