சமந்தாவின் இதயத்தை வென்ற இயக்குநர்.... வைரலாகும் ட்விட்
தமிழ், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் தனது நடிப்புத் திறமையால் சக்கை போடு போடுபவர் நடிகை சமந்தா.
தற்போது குணசேகர் இயக்கத்தில் சரித்திர கதையம்சம் கொண்ட சாகுந்தலம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்தத் திரைப்படமானது, தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.
வருகின்ற ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ளது.
சாகுந்தலம் திரைப்படத்தை படக்குழுவினருடன் பார்த்த சமந்தா, தனது சமூக வலைத்தளத்தில் “இன்று சாகுந்தலம் திரைப்படத்தை பார்த்தேன். குணசேகர் சார் நீங்கள் என் இதயத்தை வென்று விட்டீர்கள். எவ்வளவு அழகான திரைப்படம். மிகப் பெரும் காவியத்தை உயிர்ப்பித்துள்ளீர்கள். இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடுவதை காண ஆர்வமாக உள்ளேன்” என்று ட்விட் செய்துள்ளார்.