ராஜ் நிடிமோரு சகோதரியின் எமோஷனல் பதிவு... சமந்தாவின் வெளிவராத உண்மை
நடிகை சமந்தா நள்ளிரவு முழுவதும் தனது நாத்தனாருடன் இருந்து கவனித்துக் கொண்ட சம்பவம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருவை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இவர் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் வெளியாகி வரும் நிலையில், சமந்தாவின் நாத்தனாரும், ராஜ் நிடிமோருவின் சகோதரி ஷீத்தல் பதிவிட்டுள்ள இன்ஸ்டா போஸ்ட் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
எங்கள் தங்கம் என்ற படத்தில் திருமணத்திற்கு பின்பு நடித்துள்ள நிலையில், இப்படம் நல்ல வரவேற்பினையும் பெற்றுள்ளது. இந்த வெற்றியை கேக் வெட்டி கொண்டாடப்பட்ட நிலையில், சமந்தாவின் வயிறு அவர் கர்ப்பமாக இருக்கின்றார் என்ற சந்தேகத்தினை கிளப்பியுள்ளது.

ஷீத்தலின் பதிவு
இந்நிலையில் ராஜ்நிடிமோருவின் சகோதரி ஷீத்தல் தனது இன்ஸ்டாவில், சமந்தாவின் திருமணம் முடிந்த நாட்களில் சில நாட்கள் ஹைதராபாத்தில் தங்கியதாகவும், ஒருநாள் இரவு, திடீரென வாந்தி, குளிர், தலைவலி ஏற்பட்டு எழமுடியாமல் போய்விட்டது.
வேறு வழியில்லாமல் குடும்ப வாட்ஸ் அப் குருப்பில் மெசேஜ் செய்து ஏதேனும் மருந்து இருக்கின்றதா? என்று கேட்டுள்ளார். உடனே சமந்தா நான் வருகிறேன் என்று கூறி உடனே வந்துள்ளார்.

இரவு முழுவதும் தூங்காமல் என்னை கவனித்துக் கொண்டார். திருமணமான புதிதில் இந்த சம்பவம் நடந்தது. காலையில் ஷுட்டிங் இருந்தது. மறுநாள் படப்பிடிப்பிற்கு சென்று நான் பார்த்தபோது, அவர் புடவை கட்டி நடித்துக் கொண்டிருந்தார், வேலையில் கவனம், முகத்தில் சிரிப்பு என இரவு தூங்கியது போன்று வேலை செய்து கொண்டிருந்தார்.
அந்த இடத்தில் என்னை பார்த்து உடல் இப்போ எப்படி இருக்கின்றது என்று அக்கறையுடன் கேட்டது தற்போதும் நினைவில் இருக்கின்றது. அந்த காட்சியை பார்க்கும் போது முகத்தில் சோர்வு இல்லாமல், இரவு தூங்கவில்லை என்பதை காட்டிக்கொள்ளவும் இல்லாமல் இயல்பாக இருந்தார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |