சமந்தாவின் தற்போதைய நிலை என்ன? சோகமான முகத்துடன் வெளியான புகைப்படம்
யசோதா திரைப்படத்தின் புரமோஷனுக்காக நடிகை சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் கண்கலங்கிப் போயுள்ளனர்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையான சமந்தா, சமீபத்தில் தனது சமூக ஊடக பதிவின் மூலம் தான் மயோசிடிஸ் (Myositis) என்ற ஆட்டோ இம்யூன் கோளாறால்(autoimmune disorder) பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
அத்துடன் தான் தொடர் சிகிச்சையில் இருந்து வருவதாகவும், விரைவில் குணமடைந்து விடுவேன் என்றும் அந்த பதிவில் சமந்தா ரூத் பிரபு குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், நடிகை சமந்தா நடித்து நவம்பர் 11ம் திகதி வெளிவர இருக்கும் யசோதா திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் சமந்தா கலந்து கொள்ள உள்ளார்,
இதற்காக சமீபத்தில் வெளிவந்து இருக்கும் அவரது புகைப்படங்களை பார்த்து அவரது ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
பொதுவாகவே சமூக ஊடகங்களில் சமந்தா வெளியிடும் புகைப்படங்கள் குறும்புதனத்துடனும், அனைவரையும் கவரும் வகையிலும் இருக்கும், மேலும் சமூக ஊடகங்களில் எப்போது சமந்தாவின் புதிய புகைப்படங்கள் வெளிவந்தாலும் அதை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து விடுவார்கள்.
ஆனால் தற்போது யசோதா திரைப்படத்தின் புரமோஷனுக்காக கருப்பு உடையுடன் சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்களில் அவர் மிகவும் வாடிய முகத்துடன் காணப்படுகிறார். வாடிய முகத்துடன் சமந்தாவின் புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் கண் கலங்கிப் போய் உள்ளனர்.