Fashion குறித்து நடிகை சமந்தா வெளியிட்ட காணொளி... குவியும் லைக்குகள்
நடிகை சமந்தா ஃபேஷன் என்பது எனக்குப் பிடித்த கதைசொல்லல் என குறிப்பிட்டு தனது சமூக வலைத்தள பக்ககத்தில் வெளியிட்டுள்ள காணொளி தற்போது இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது.
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் விண்ணை தாண்டி வருவாயா திரைபடத்தின் மூலம் அறிமகமானவர் தான் நடிகை தான் சமந்தா.
அதனை தொடர்ந்து தமிழில் விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார்.
தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நடித்தபோது நாக சைதன்யாவை காதலித்தார்.
இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் அவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது.
திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பில் தீவிரம் காட்டி வந்தார் சமந்தா. ஆனால் திடீரென கடந்த 2021ஆம் ஆண்டு நாங்கள் இருவரும் பிரிகிறோம் என்று நாக சைதன்யாவும், சமந்தாவும் சமூக வலைதளத்தில் அறிவித்தனர்.
அதன் பின்னர் நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். அதனால், சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என அறிவித்துவிட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
பின்னர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லுதல், தியானம் மற்றும் யோகா பயிற்சி என சிறிது காலம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
நடிகை சமந்தா தற்போது வருண் தவானுடன் இணைந்து சிட்டாடலின் இந்திய ரீமேக்கான சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.
சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைத்தன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் கடந்த வருட இறுதியில் திருமணம் நடிந்து முடிந்தது.
கடினமான சூழ்நிலைகளையும் அமைதியாக சிரிப்புடன் கடந்து செல்லும் இவரின் பக்குவத்தை பார்த்து இவரின் ரசிகர் கூட்டம் பெருகிக்கொண்டே போகின்றது.
சினிமாவில் மாத்திரமன்றி சமூக வளைத்தளங்களிலும் எப்போதும் ரசிகர்களை மகிழ்வித்து வரும் சமந்தா தற்போது, ஃபேஷன் என்பது எனக்குப் பிடித்த கதைசொல்லல், மேலும் 2024 எனக்குப் பல அத்தியாயங்களைக் கொடுத்தது.
கடந்த 2025-ம் ஆண்டின் ஒரு பார்வை இதோ, உங்களுக்காக நான் தயாராக இருக்கிறேன்! எப்போதும் எனக்காக இருப்பதற்கு நன்றி என குறிப்பிட்டு தனது புகைப்படங்களை இணைத்து வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |