வெற்றியாளர்கள் கடைப்பிடிக்கும் இந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா? நீங்களும் முயற்சிக்கலாமே...
பொதுவாகவே நாம் ஓய்வில் இருக்கும் போது நமது கைகளை எந்த நிலையில் வைத்திருக்கின்றோம் என்பது இன்றியமையாதது.
காரணம் நமது அறிவாற்றல், வெற்றி மற்றும் மன அமைதி ஆகிய அனைத்தும் நமது கைகளில் தான் தங்கியிருக்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
அதைத்தான் முன்னோர்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் என்ற நிலையில் கூட உன் வாழ்கை உன் கையில் என குறிப்பிட்டுள்ளார்கள்.
உயர் பதிவியில் இருப்பவர்கள், சினிமா பிரபலங்கள், பெரிய அரசியல் வாதிகள், தொழில் அதிபர்கள் போன்றோர் ஒரு இடத்தில் அமர்ந்திருக்கும் பொது அவர்களின் கைகளை எந்த நிலைகளில் வைத்திருக்கின்றார்கள் என்று எப்போதாவது அவதானித்திருக்கின்றீர்களா?
முத்திரைகளின் ஆற்றல் பற்றி அறிந்து வைத்திருப்பதன் காரணமான தான் அவர்கள் அதனை பின்பற்றுகின்றார்கள். அப்படி ஆற்றல் மிக்க 3 முத்திரைகள் குறித்து தெளிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
உத்திரபோதி முத்திரை
உடலில் உள்ள அனைத்து செல்களையும் புதுப்பிக்கக்கூடிய அதிஅற்புதமான ஆற்றல் மிக்க முத்திரையாக இந்த உத்திரபோதி முத்திரை குறிப்பிடப்படுகின்றது.
உத்திரபோதி முத்திரையை நாம் தொடர்ந்து செய்துகொண்டு வரும்போது நமது உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
உடலும், மனதும் சோர்ந்துபோய் இருக்கும் போது நமக்கு இந்த முத்திரை உடனடியாக உட்சாகத்தை கொடுக்கும்.
அதனால் தான் வாழ்வில் பல சாதனைகளை செய்தவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி பயன்படுத்துகின்றார்கள்.
இந்த முத்திரையில் கைகளை வைத்திருக்கும் போது முழுமையான கவனத்துடனும், தன்னம்பிக்கையுடனும் இருக்க முடியும்.
அக்னி முத்திரை
பிரைபலங்கள் ஒரு குழு உறையாடலில் இருக்கும் போதும் அல்லது பேட்டி கொடுக்கும் போதும் கூட இந்த முத்திரையில் இருப்பதை அவதானித்திருப்பீர்கள்.
இந்த முத்திரையில் கைகளை வைத்திருக்கும் தர்க ரீதியில் சிந்திக்ககூடிய ஆற்றல் கிடைக்கும். உங்களின் பேச்சில் கவனம் மற்றும் தெளிவு இருக்கும்.
அக்னி முத்திரை நினைவாற்றலை அதிகரிக்கச்செய்யும். வலலு பக்க மூளை மற்றும் இடது பக்கமூளை இரண்டையும் ஒன்றாக இயங்கச்செய்வதன் மூலம் அறிவாற்றல் அதிகமாகும்.
தியான முத்திரை
மன அழுத்தத்தை நீக்கி மன அமைதி தருவதுதான் தியான முத்திரை. இந்த முத்திரை செய்வதால் டென்ஷன், பதட்டம், கவலையினால் ஏற்பட்ட உடல் பாதிப்புகள் நீங்கி உடனடியாக மனம் அமைதி அடையும்.
சின்ன சின்ன விடயங்களுக்கு கோபபடும் நிலை மாறி சிந்தித்து செயல்படும் நிலை உருவாகும். மற்றவர்களின் தூண்டல்களுக்கு உடனடியாக எதிர்வினையாற்றும் பழக்கம் குறையும்.
உச்சகட்ட கோபத்திலும் உங்களின் வார்த்தையிலும் செயலிலும் முழுமையான நிதானம் இருக்கும். இந்த சக்தியை இந்த முத்திரைகள் கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |