திடீரென நடிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த நடிகை சமந்தா.. குழந்தை பெற்றுகொள்ள காரணமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா.. தெலுங்கில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கரம் பிடித்த சமந்தா, அதன் பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்.
இவர், கைவசம் சாகுந்தலம் என்ற தெலுங்கு படமும், தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படம் மட்டுமே இருந்த நிலையில், இவ்விரு படங்களையும் நடித்து முடித்து விட்டார்.
மேலும், தமிழகத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'தி ஃபேமிலி மேன் 2 ' வெப் சீரிசுக்காக இவருக்கு சமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.
இந்நிலையில், நடிகை சமந்தா ஏற்கனவே திரையுலகை விட்டு விலக உள்ளதாக சில தகவல்கள் உலா வந்த நிலையில், தற்போது சமந்தாவே அதனை உறுதி செய்துள்ளார்.
சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒண்றில், சில காலம் திரையுலகில் இருந்து விலகி ஓய்வெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் நெட்டிசன்கள் சமந்தா தற்போது குழந்தை பெற்றுக்கொள்ள தயாராகி விட்டதாக கூறி வருகிறார்கள். சமந்தா மற்றும் அவருடைய கணவர் இருவரும், கோவாவில் இடம் ஒன்றை வாங்கி, அங்கு ஒரு பண்ணை வீடு கட்டி வந்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடதக்கது.