இரத்த காயங்களுடன் ரசிகர்களை ஓட விட்ட சமந்தா! அதிர்ச்சியில் இணையவாசிகள்
கைகளில் இரத்த காயங்களுடன் நடிகை சமந்தா புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் “பாணா காத்தாடி” என்ற திரைப்படத்தில் நடித்து தான் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் தான் நடிகை சமந்தா.
இவரின் முதல் படம் நினைத்தளவு வெற்றியை தராவிட்டாலும், இவரின் அடுத்தடுத்து வெளிவந்த திரைபடங்கள் மக்களுக்கு பிடித்தமானதாகவும் விரும்பி பார்க்கும் திரைப்படமாகவும் மாறியுள்ளது.
இன்று தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவரன் சம்பளம் நாளுக்கு நாள் உயர்வடைந்துக் கொண்டே செல்கிறது.
இதனை தொடர்ந்து சமந்தா விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல தமிழ் சினிமாவில் முன்னணி இருக்கும் நடிகர்களுடன் கலக்கி வருகிறார். மேலும் சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இரத்த காயங்களுடன் வெளிவந்த புகைப்படங்கள்
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான விடங்களை அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இதன்படி, இரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்த கையை பார்க்கும் போது நன்றாக அடிப்பட்டிருப்பது போல் இருக்கிறது.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த ரசிகர்கள், “நோயிலிருந்து மீண்டு வந்த சமந்தாவிற்கு இப்படி ஒரு நிலையா? ” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.