புதிய தொழிலை ஆரம்பித்த சமந்தா.. சினிமாவை விட்டு சென்றதற்கு இது தான் காரணமா?
சினிமாவை விட்டு புதிய தொழிலை ஆரம்பித்த சமந்தாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை சமந்தா.
இவர் இயக்குனர் “கவுதம் மேனன்” இயக்கத்தில் வெளியாகிய “விண்ணைத்தாண்டி வருவாயா” என்ற படத்தில் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.
தற்போது கோலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை சென்று பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் சில வருடங்களில் நிறைவை சந்தித்தது.
இப்போது தனிமையில் இருந்து வரும் சமந்தா, சினிமாவிலிருந்து ஒரு வருடம் ஓய்வில் இருந்து வருகிறார்.
தோட்ட பயிர்செய்கையில் இறங்கிய சமந்தா
சமீபக்காலமாக கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த இடைவேளையை சமந்தா எடுத்துள்ளார்.
இப்படியொரு நிலையில் சமந்தா வீட்டு தோட்டம் செய்து கொள்ளும் போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் “ சமந்தாவிற்கு வீட்டு தோட்டம் செய்ய தெரியுமா? ” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |