விவாகரத்து அறிவிப்பை நீக்கிய சமந்தா: மீண்டும் காதல் கணவருடன் சேரப்போகிறாரா? குழப்பத்தில் ரசிகர்கள்
நடிகை சமந்தா விவாகரத்து குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பதிவினை அதிரடியாக நீக்கியுள்ளது ரசிகர்களிடையே குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் குடும்ப வாழ்விலிருந்து பிரிவதாக கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி சமூகவலைத்தளங்களில் அறிவித்தனர்.
இவர்கள் பிரிய போகிறார்கள் என்று அறிவிப்பு வருவதற்கு முன்பே ரசிகர்களுக்கு சமந்தாவே தனது டுவிட்டரில் பெயரை மாற்றி சிக்னல் கொடுத்தார்.
இவர்களின் பிரிவிற்கு பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில், தற்போது வரை உண்மையான காரணம் குறித்து இருவரும் கூறாமல் மௌனம் காத்து வருகின்றனர்.
அதன் பின்பு இருவரும் தங்களது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தற்போது சமந்தா செய்த காரியம் ரசிகர்களை குழப்பமடைய வைத்துள்ளது.
ஆம் திடீரென நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இத்தனை நாட்களாக இருந்து வந்த அந்த விவாகரத்து அறிவிப்பு திடீரென நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பெயரை நீக்கி சிக்னல் தந்ததை போலவே தற்போது விவாகரத்து அறிவிப்பை நீக்கி நடிகை சமந்தா சிக்னல் கொடுக்கிறாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
ஆனால், அதே சமயம் நடிகர் நாக சைதன்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்னமும் அந்த விவாகரத்து அறிவிப்பு நீக்கப்படவில்லை.
நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து முழுமையாக அந்த அறிவிப்பு நீக்கப்பட்டதா? அல்லது Archive செய்யப்பட்டதா? என்பது குறித்த தகவல் இல்லை. விரைவில் இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.